யாழ் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் ச.ர்ச்சையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் செயல்!!

927


சந்நிதி முருகன் ஆலயத்தில்..


இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்த பொலிஸ் மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன வரலாற்றுச் சிறப்புமிக்க துன்னாலை ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மற்றும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திற்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை சந்திக்கவுள்ள அவர் பின்னர் காங்கேசன்துறையில் தங்கியிருந்து நாளை வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பில் நேரில் ஆராய்வது சம்பந்தமாக கிளிநொச்சியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணமாவார் என்று தெரிவிக்கப்படுகிறது.


நாளைய கூட்டத்துக்காக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, வல்லிபுர ஆழ்வார், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயங்களுக்குள் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி பாதணியை அகற்றாமல் சென்றமை பெரும் ச.ர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது.