வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்!!

1185


விபத்து..


வவுனியா – மன்னார் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்,வவுனியா வேப்பங்குளம் மன்னார் பிரதான வீதியில் ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கூலர் வாகனம் சமுர்த்தி வங்கிக்கு முன்னால் சென்றபோது திடீரென்று பிரேக் பிடித்தால் பின்னர் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.


இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.