வவுனியா புகையிரத நிலையத்தில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் மரநடுகை!!

667


வவுனியா புகையிரத நிலையத்தில்..


சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 12-ம் திகதி கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தேசிய பேரிடர் துயர் குறைப்பு நாள் அக்டோபர் மாதம் கடைசி புதன்கிழமை கடைபிடிக்கப்படுகிறது.இயற்கையாகவும் மனிதனின் கவனக்குறைவினாலும் , தீவிரவாத செயல்களாலும் ஏற்படும் இழப்புகள் இன்னல்கள் போன்ற பேரழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும்.


அந்த வகையில் வவுனியா மத்திய புகையிரத நிலையத்தில் சர்வதேச பேரிடர் துயர் குறைப்பு நாள் தினத்தினை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.


பிரதான புகையிரத நிலைய அதிபர் இ.சந்திரகுமார் மற்றும் புகையிரத நிலைய அதிபர் ச.வைகுந்தன் ஆகியோர் இணைந்து புகையிரத நிலைய வளாகத்தில் பயன்தரும் மரங்களை நாட்டி வைத்திருந்தனர்.