வவுனியாவில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறையினை இறுக்கமாக பின்பற்றுமாறு கோரிக்கை!!

933


இந்து ஆலயங்களில்..


வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் வழிபாட்டு இடங்களில் புதிய கொத்தனி உருவாகலாம் என வவுனியா சுகாதாரப் பிரிவு கவலை தெரிவித்துள்ளதாக வவுனியா பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்,வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலுள்ள ஆலயங்களில் தற்போது முக்கிய வழிபாட்டு நிகழ்வு சரஸ்வதி பூஜை இடம்பெற்று வருவதுடன், கேதார கௌரி விரதம், கந்தசஷடி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை போன்றவையும் நடைபெறவுள்ளது.


வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் வழிபாட்டு இடங்களில் புதிய கொத்தனி உருவாகலாம் என வவுனியா சுகாதார பிரிவு கவலை தெரிவித்துள்ளது எனவே இந்து ஆலயங்களில் பூசைகளில் அதிகளவில் மக்களை உள்வாங்காது பொது நலனில் அக்கறை செலுத்துங்கள் இல்லையேல் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.


‘பயங்கரமான கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் உங்கள் பாதுகாப்பே எங்கள் நோக்கம்’ என வவுனியா பிரதேச இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் குகனேஸ்வரசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.