வவுனியாவின் பிரபல வர்த்தக நிறுவனத்தினரினால் 200 குடும்பத்திற்கு நிவாரணப் பொதிகள்!!

1909


நிவாரணப் பொதிகள்..


வவுனியா மாவட்டத்தில் கடந்த பல வருடங்களான இயங்கி வரும் பிரபல வர்த்தக நிறுவனத்தினர் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 200 குடும்பத்தினருக்கு உலர் உணவு பொதிகள் அடங்கிய நிவாரணப்பொதிகளை வழங்கி வைத்தனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ் நிலையினால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 200 குடும்பத்தினருக்கு வவுனியா மாவட்டத்தில் இயங்கி வரும் லாவண்யா நகையக உரிமையாளரினால் நிவாரணப்பொதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


குறித்த நிறுவனத்தினர் கடந்த சில காலங்களாக வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன் செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை சிறப்பம்சமாகும்.