வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் ஒருவனை காணவில்லை!!

661

Student misவவுனியா, வேப்பங்குளம் 8ம் ஒழுங்கையைச் சேர்ந்த மாணவன் ஒருவனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (01) பாடசாலையில் இருந்து வீடு வந்து சாப்பிட்டு விட்டு தனியார் கல்வி நிலையத்திற்கு சென்ற மாணவன் புதன்கிழமை (02) வரை வீடு வந்து சேராமையால் அம் மாணவனின் பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இவ்வாறு காணாமல் போன மாணவன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 17 வயதுடைய டிலக்சன் கிருசாந்தன் ஆவார்.

-நன்றி அதிரடி இணையம்-