வவுனியாவில் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிப்பு : மக்கள் அவதி!!

318

Vavuniya

வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டின் வெப்பநிலை தற்போது அதிகரித்துள்ளதாக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன குறிப்பிடுகின்றார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறிப்பாக ஏப்ரல் மாதத்தில் சூரியன் இலங்கைக்கு உச்சம் கொடுப்பதால், இந்த மாதத்தின் முதல் வாரத்திலிருந்து 18 நாட்கள் வரை நாட்டில் அதிக வெப்பம் நிலவும் என்றும் அவர் ​தெரிவித்தார்.

மே மாதம் வரை ஓரளவு வெப்பநிலை அதிகரி்த்தே காணப்படுவதுடன், நுவரெலியா பிரதேசத்திலும் காலநிலையில் சிறிதளவு மாற்றம் ஏற்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

மாவட்டத்திற்கு மாவட்டம் வெப்பநிலையில் வித்தியாசம் நிலவுவதுடன், சில வேளைகளில் 39 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

வவுனியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் தற்போது அதிக வெப்பநிலை காணப்படுவதுடன், அந்த மாவட்டங்களில் 37.5 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளதாக பிரதிப் பணிப்பாளர் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டார்.