எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் : இலங்கையர்களுக்கான கடும் எச்சரிக்கை!!

1662

கோவிட்..

கோவிட் பெருந்தொற்றின் புதிய திரிபுகள் எந்த நேரத்திலும் நாட்டுக்குள் ஊடறுவ முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்கு நாடு திறந்து விடப்பட்டுள்ளதாகவும், துறைமுகங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் புதிய திரிபுகள் எந்த நேரத்திலும் நாட்டுக்குள் ஊடுறுவி ஆபத்துக்களை விளைவிக்கக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய திரிபு தாக்கம் பற்றி எதிர்வு கூறல்களை வெளியிடுவது நடைமுறைச் சாத்திமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களும் பூரணமாக சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதே நோய்த் தொற்றை கட்டுப்படுத்தக் கூடிய ஒரே வழியெனத் தெரிவித்துள்ளார். நாட்டில் 58 வீதமானவர்களுக்கு இரண்டு மாத்திரை தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-