16 வயதில் முதுமை தோற்றம் பெற்ற சிறுமி!

1574

 

16 வயதான இளம் பெண் ஒருவர், அரியவகை மரபணு பிரச்சினையால், 60 வயது பெண் போல காட்சி தருகிறார். இங்கிலாந்தின் ரோதர்ஹாம் நகரை சேர்ந்தவர் ஸாரா ஹார்ட்ஷார்ன்.

இவருக்கு 16 வயதே ஆகிறது. ஆனால் அரிய வகை மரபணு பிரச்சினையால் இவரது தோல் சுருங்கி 60 வயதான நபர் போன்று காட்சி தருகிறார்.

இந்தநிலையில் ஸாராவின் பிரச்சினை குறித்து அறிந்த அமெரிக்க மருத்துவர் ஒருவர், முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சையை இலவசமாக செய்துள்ளார்.

இதனால் முகத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுவே அவருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோன்று இவரது தாய் டிரேசி ஜிப்சனுக்கும் பிரச்சினை உள்ளதால் இது ஒரு பரம்பரை வியாதி என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

1

2 3