வவுனியாவில் ”நாட்டின் முதுகெலும்பு விவசாயம் விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே” கவனயீர்ப்பு போராட்டம்!!

1230

கவனயீர்ப்பு போராட்டம்..

நாட்டில் உரம் மற்றும் கிருமிநாசினி பற்றாக்குறை விவசாயிகளையும் ,தோட்டத்தொழிலையும் மிக மோசமாகப் பாதித்திருப்பதாக தெரிவித்து வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன்பாக விவசாயிகள் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் வவுனியா இலுப்பையடி சந்தியில் அமைந்துள்ள கோவில்குளம் கமநல நேவைகள் நிலையத்திற்கு முன்பாக இன்று (18.10) காலை 9.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அரசே நாட்டின் முதுகெலும்பு விவசாயம் விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே , அரசே விவசாயத்திற்கான உரத்தையும் உரமானியத்தையும் உடன் வழங்கு,

அரசே விவசாயத்திற்கு பசளை வேண்டும், சேற்றில் கால் வைக்காத உனக்கு சோற்றில் கை வைக்கவும் உரிமை கிடையாது போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்த நிலையில் இருவரை தவிர எவரும் வருகைதராத நிலையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி உறுப்பினர்கள்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் மற்றும் ஏழு விவசாயிகள் என பதினைந்து பேருடன் காலை 9.30 மணியளவில் போராட்டம் ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.