வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பம்!!

1807

தடுப்பூசி..

வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை (21.10) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்தில் நாளை (21.10) முதல் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் முதல் கட்டமாக வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த 18, 19 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து ஏனைய பாடசாலை மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.