வவுனியா மாவட்டத்தில் 98 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டன!!

804

பாடசாலைகள்..

வவுனியா மாவட்டத்தில் சிங்களப் பாடசாலைகள் உள்ளடங்களாக 108 பாடசாலைகள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் 98 பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் கு.திலீபன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகள், சிங்கள மொழி பாடசாலைகள் உள்ளடங்களாக 108 பாடசாலைகள் இன்று (21.10) திறப்பதற்கு கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருந்தது. அதனடிப்படையில் மீள திறக்கப்பட்ட பாடசாலைகளின் விபரங்கள் வலயக் கல்வி திணைக்களம் ஊடாக எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வவுனியா தெற்கு வலயத்தில் 44 பாடசாலைகளில் 35 பாடசாலைகளும், வவுனியா வடக்கு வலயத்தில் 64 பாடசாலைகளில் 63 பாடசாலைகளும் மீள திறக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் 91 வீதமான பாடசாலைகள் மீள திறக்கப்பட்டுள்ளன.

எனது தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக எமது மாவட்டத்தின் கல்வி நிலையையும், மாணவர்களினது நிலமையையும் கருத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்கி பாடசாலைகளை மீள திறந்து கற்றல் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கிய அதிபர், ஆசிரியர்களுக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற வகையில் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.