இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதப்போவது யார் : இந்திய – தென்னாபிரிக்க அணிகள் இன்று பலப் பரீட்சை!!

590

Ind

உலக கோப்பை T20 தொடரின் 2வது அரை இறுதியில் இந்திய- தென்னாபிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன.

பங்களாதேஷத்தில் நடந்து வரும் உலக கோப்பை T20 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 10 லீக் சுற்றின் முடிவில், முதல் பிரிவில் இருந்து இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா, 2வது பிரிவில் இருந்து இந்தியா, நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.

முதலாவது அரை இறுதியில் இலங்கை மேற்கிந்திய தீவுகள் மோதிய நிலையில் இலங்கை அணி வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

இன் நிலையில் இந்தியா தென்னாபிரிக்க அணிகள் மோதும் 2வது அரை இறுதி ஆட்டம் மிர்பூர், தேசிய மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

டோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 4 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

உலக கோப்பை போன்ற பெரிய போட்டித் தொடரில் தென்னாபிரிக்கா சாதித்ததில்லை என்பதால் இன்றைய போட்டியில் வெற்றிபெறும் முனைப்புடன் களமிறங்கவுள்ளது.

அதேநேரம் இந்திய அணி தொடர்ச்சியாக பல தொடர்களை இழந்து நெருக்கடிகளுடனேயே த20 தொடரில் பங்கேற்றது. எனவே இந்திய அணியும் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஆகவே இன்றைய போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெறும் நோக்குடன் மோதவுள்ளதால் ரசிகர்களுக்கு இப் போட்டி விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.