இலங்கையில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் : விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள சட்டம்!!

1489

சமூக வலைத்தளங்களில்..

சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகளை கட்டுப்படுத்த புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரவுள்ளது.  போலியான தகவல்கள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் அலி சப்ரி(Ali Sabry) நாடாளுமன்றத்தில் வைத்து இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

“இந்த சட்டத்தின் ஊடாக சமூக வலைத்தளங்களில் பரவும் போலியான செய்திகள் கட்டுப்படுத்தப்படுமே தவிர, மக்களின் உரிமைகள் மீறப்படமாட்டாது” என்று நீதி அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

-தமிழ்வின்-