வவுனியாவில் 16 – 17 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!!

2003

தடுப்பூசி..

வவுனியா மாவட்டத்தில் 16 -17 வயது மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (25.10) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசிகளை வழங்கி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைவாக, வவுனியாவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி என்பவற்றில் பாடசாலை மாணவர்களுக்கான கோவிட் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டமையை அவதானிக்க முடிந்தது.