வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளை கொவிட் தொற்றால் மூடப்பட்டது!!

980


செட்டிகுளம்..


வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளை கொவிட் அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட இருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்கள் மேற்கொண்ட அன்டிஜன் பரிசோதனையிலேயே அவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து அவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், செட்டிகுளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் கிளை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.