இலங்கையில் கடவுச்சீட்டுக்களை பெற படையெடுக்கும் மக்கள் : வெளியான காரணம்!!

2241

கடவுச்சீட்டு..

இலங்கையில் தற்போது பெருமளவானோர் கடவுச்சீட்டுக்களை பெறும் நோக்கில் குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு வருகை தந்த மக்களிடம் இது தொடர்பில் எமது செய்தி குழு வினவியது.

அதனடிப்படையில், பெரும்பாலானோர் தாம் வெளிநாடுகளுக்கு செல்லும் நோக்கில் கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்ள நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பினையே காரணமாக காட்டியுள்ளனர்.

அத்துடன் தாயொருவருக்கே ஊடச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண முடியாத சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் குழந்தைக்கு பாலூட்ட கூட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இன்னும் சிலர் இனியாவது மக்கள் இளைஞர்களை ஆட்சிக்கு கொண்டு வரும் வகையில் வாக்குகளை வழங்கி, நாட்டின் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

-தமிழ்வின்-