தனது தலை முடியை தானே உண்ணும் 16 வயது சிறுமி : இப்படி ஒரு நோயா?

967

குஜராஜ்..

இந்தியாவில் இளம்பெண் ஒருவர் தனது தலை முடியை உண்ணும் சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராஜ் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வருபவர் 16 வயது சிறுமி.

இவரது தாய் அதே பகுதிகளில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். ஒரு ஆண்டிற்கு முன்பு இவரது தந்தை ஒரு விபத்தில் இறந்து விட்டார். அந்த சிறுமி தற்போது 11ஆம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த சில மாதங்களாக சரியாக சாப்பிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உடல் எடை வேகமாக குறைந்து உடல்நிலை சரியில்லாமல் போனது.


அதுமட்டும் இல்லாமல் அந்த சிறுமியின் நடவடிக்கையில் பெரிதும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப்போன சிறுமியின் தாயார் பக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போகினர். அந்த சிறுமியின் வயிற்றில் முடி உருண்டை இருந்துள்ளது. மேலும் இந்த முடி உருண்டையை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் அடைத்திருந்த முடி உருண்டை அகற்றப்பட்டது.