காதலனின் மனைவிக்கு இளம் பெண் செய்த மோசமான செயல் : கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

772


கேரளாவில்..


திருவனந்தபுரத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டு நிர்வாணமாக ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.இளம்பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். வாட்ஸ் அப் எண்ணை கொண்டு விசாரணையை தொடங்கியதில் அந்த எண்ணானது மிபின் ஜோசப் என்பவருடையது எனத் தெரியவந்தது.


இதனையடுத்து அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் செளமியா என்ற இளம்பெண் கூறியதன் பேரில் தான் இவ்வாறு செய்ததாக போலீஸில் வாக்குமூலம் கொடுத்தார்.


இந்த விவகாரத்தில் மிபின் ஜோசப் மற்றும் செளமியா ஆகிய இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பேசிய போலீஸார், “ செளமியாவின் முன்னாள் காதலர்தான் அந்த இளம்பெண்ணின் கணவர்.

செளமியாவிடம் பணம் பெற்று அவர் திரும்பத் தரவில்லை எனக் கூறப்படுகிறது. அந்த நபரை பழிவாங்க வேண்டும் அவர்களது திருமண பந்தத்தை முறிக்க வேண்டும் என்ற நோக்கில் ஃபேஸ்புக்கில் அவர்கள் பதிவிட்டிருந்த திருமணப் போட்டோக்களில் இருந்து போட்டோவை எடுத்து அதனை விவின் ஜோசப் உதவியுடன் மார்பிங் செய்து சமூகவலைதளத்தில் பதிவேற்றியுள்ளார்.

செளமியா தனியார் ஹோமியோபதி க்ளீனிக் ஒன்றில் ரிஷப்ஷனிஸ்டாக பணியாற்றி வருகிறார். மிபின் ஜோசப் கடந்த ஒருவருடமாக வேலை எதுவும் இல்லாமல் உள்ளார். சமூகவலைத்தளம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

செளமியாவுக்கு முகநூலில் போலி அக்கவுண்ட் ஓபன் செய்தது. மார்பிங் செய்த போட்டோவை வைத்தது என அனைத்து உதவிகளையும் மிபின் செய்தது தெரியவந்துள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.