யாழில் தாயின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

1216


யாழில்..


யாழ். வடமராட்சி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். தனது தாயாரின் வீட்டிற்கு குறித்த நபர் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரு பிள்ளைகளின் தந்தையொருவரே உயிரிழந்துள்ளார்.