தடுப்பூசி..

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதனை தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்பூசி தன்னார்வத் தடுப்பூசி என்பதால் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அரசாங்கத்தால் வற்புறுத்த முடியாது. எனினும் ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் பெரும்பான்மையினரின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்காக பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்கள் நுழைய தடை விதிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒரு தனிநபருக்கு தனது உயிரைப் பாதுகாத்துக்கொள்ள உரிமை உள்ளதைப் போன்று, மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அவருக்கு உரிமை இல்லை.

ஐரோப்பா முழுவதும் பொது இடங்களில் இத்தகைய சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு சில வைரஸ்கள் வருவதை அறிந்த ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில், அந்த நபரையும் அவ்வாறான பொறுப்பில் இருந்து விடுவிக்க முடியாது. பெரும்பான்மையினரின் நலனுக்காக இவ்வாறான தீர்மானத்தை எடுக்க முடியும் என அவர் மேலும் தெர்வித்துள்ளார்.
-தமிழ்வின்-





