வவுனியா ஏ9 வீதியினை மறித்து பொதுமக்கள் போ.ராட்டம் : 30 நிமிடங்கள் போக்குவரத்து ஸ்தம்பிதம்!!

2161


ஏ9 வீதி..



வவுனியாவில் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறி த.ற்.கொ.லை மு.யற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞருக்கு நீதி கோரி பொதுமக்கள் ஏ9 வீதியினை ம.றித்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டமையினால் 30 நிமிடங்களுக்கு மேலாக ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்.தம்பிதம் அடைந்திருந்தது.



வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இரு இளைஞர்கள் (குறித்த இளைஞரும் மற்றும் தனது அண்ணியினை மீ.ட்டுத்தருமாறு கோரி அவரது உடன்பிறவாத சகோதரனும்) இன்று மதியம் தொடக்கம் த.ற்.கொ.லை மு.யற்சியில் ஈ.டுபட்டு வந்த நிலையில்,




க.டும் மு.யற்சியின் மத்தியில் ஒருவர் (உடன்பிறவாத சகோதரன்) மீ.ட்கப்பட்டடார். எனினும் மற்றைய இளைஞன் தனது காதல் மனைவியினை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மற்றைய இளைஞன் தொடர்ந்தும் போ.ராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.


தொலைத்தொடர்பு கோபுரத்தில் இளைஞன் மதியம் 3.00 மணியளவில் ஏறி த.ற்.கொ.லை மு.யற்சி மே.ற்கொண்ட நிலையில் மாலை 6.30 மணி ஆகியும் பொலிசார் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை தெரிவித்து,

அவ் இளைஞரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியினை ம.றித்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டிருந்தனர்.


பொலிஸார் பல தடவைகள் பொதுமக்களுடன் கலந்துரையாடியும் அது பலனளிக்கவில்லை அதன் பின்னர். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் , வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட உயர் அதிகாரிகள்,

வீதியினை ம.றித்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வினை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தமையினையடுத்து அவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றிருந்தனர்.

இதன் காரணமாக ஏ9 வீதியூடான போக்குவரத்து 30 நிமிடங்களுக்கு மேலாக ஸ்.தம்பிதம் அடைந்திருந்ததுடன் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.