வவுனியா A9 வீதியில் மக்கள் போராட்டம் : முச்சக்கரவண்டியுடன் இராணுவ வாகனம் மோதுண்டு விபத்து!!

1360


விபத்து..


வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இன்று (27.10) மாலை 6.30 மணியளவில் இராணுவ வாகனம் மற்றும் முச்சக்கரவண்டி மோதுண்டு விபத்துக்குள்ளானது.வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞருக்கு நீதி கோரி பொதுமக்கள் ஏ9 வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டமையினால் 30 நிமிடங்களுக்கு மேலாக ஏ9 வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.


அச் சமயத்தில் அவ்வீதியூடாக வந்த இராணுவ வாகனம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கடந்து செல்ல முற்பட்ட சமயத்தில் போராட்டம் காரணமாக வீதியில் தரிந்து நின்ற முச்சக்கரவண்டியுடன் மோதுண்டு இராணுவ வாகனம் விபத்துக்குள்ளானது.


இவ் விபத்தில் முச்சக்கரவண்டியின் முன்பகுதியில் சேதமடைந்திருந்துடன் உயிராபத்துக்கள் எவையும் நிகழவில்லை அதன் பின்னர் அவ்விடத்திலிருந்து இராணுவ வாகனம் சென்றதுடன் விபத்து தொடர்பில் பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.