வவுனியாவில் மனைவியை மீட்டுதரக் கோரி 200 அடி தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம் : மூன்று மணிநேர போராட்டம் நடந்தது என்ன?

4182

தொலைதெடர்பு கோபுரத்தில் ஏறி..

காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீ.ட்டுத் தரக் கோரி வவுனியாவில் 200 தொலைதெடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போ.ராட்டம் மேற்கொண்டதுடன், பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக தெரிவித்து உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போ.ராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இன்று (27.10) பிற்பகல் 3.30 மணியில் இருந்து 7 மணிவரை குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது. இதனால் அப்பகுதியில் ப.தற்றமான நிலையும், போக்குவரத்து நெ.ரிசலும் ஏற்பட்டிருந்தது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியை காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன், கடந்த யூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களை தா.க்.கி.வி.ட்.டு மனைவியை கொ.ண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிசில் கணவன் மு.றைப்பாடு செய்திருந்தார். இது தொர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

தனது ம.னைவி க.ட.த்.த.ப்.ப.ட்.ட நிலையில் வாகன இலக்கம், வந்தவர்கள் விபரம் என்பன வழங்கியும தனது மனைவியை இதுவரை பொலிசார் மீ.ட்டுத் தரவில்லை எனவும்,

பொலிசார் பக்கச் சார்பாகவும், அ.சமந்தமாகவும் செயற்படுவதாக தெரிவித்தும் குறித்த இளைஞன் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி போ.ராட்டத்தில் ஈடுபட்டார்.

தனது மனைவி வராவிடின், த.ற்.கொ.லை செ.ய்.ய.ப் போவதாகவும் தெரிவித்த நிலையில், குறித்த இ.ளைஞனை மீ.ட்க தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிய உறிவினரான பிறிதொரு இளைஞன், போ.ராட்டத்தில் ஈடுபட்டவருடன் இணைந்து தொலைத்தொடர்பு கோபுரத்தில் இருந்து போ.ராட்டத்தில் ஈ.டுபட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார் நிலமையை அவதானித்துக் கொண்டிதுருந்தனர். வவுனியா நகரசபை தீயணைப்பு வாகனம் வருகை தந்து ஒலிபெருக்கி மூலம் குறித்த இளைஞர்களை கீழே இறங்கி வருமாறு அழைத்தனர்.

போ.ராட்டத்தில் ஈடுபட்ட இளைஞனுக்கு ஆதரவாக தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி போ.ராடிய இளைஞன் அப் பகுதி இளைஞர்களால் மீ.ட்கப்பட்ட நிலையில் பொலிசார் அவரை அழைத்துச் சென்றிருந்தனர்.

மற்றை இளைஞன் நீண்ட நேரமாக போ.ராட்டத்தில் ஈடுபட்டும் தீர்வு கிடைக்காமையால், குறித்த இளைஞனை கா.ப்பாற்ற கோரியும், பொலிசாரின் அசமந்ததைக் க.ண்டித்தும் இளைஞனின் உறவினர்கள் பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயம் முன்பாக ஏ9 வீ.தியை ம.றித்து சுமார் 30 நிமிடம் போ.ராட்டத்தில் ஈ.டுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போ.ராட்டத்தில் ஈ.டுபட்டவர்களுடன் கலந்துரையாடி நாளை தீர்வுப் பெற்றுத் தருவதாக வழங்கிய வாக்குறுதியையடுத்து வீ.தி ம.றியல் போ.ராட்டம் கை.வி.டப்பட்டது.

இதனையடுத்து பொலிசாரும் உறவினர்களும் இணைந்து ஒலிபெருக்கி மூலம் வாக்குறுதி வழங்கி தொலைதொடர்பு கோபுரத்தில் இருந்து இளைஞனை இறக்கினர்.

கீழே இறங்கிய இளைஞன் தனது மனைவியை மீ.ட்டுத்தமாறு பொலிசாரிடம் ம.ன்றாடியதுடன், ம.யக்கமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அ.னுமதிக்கப்பட்டுள்ளார்.

சுமார் மூன்றரை மணித்தியாலயமாக நடைபெற்ற குறித்த போ.ராட்டத்தால் அப்பகுதியில் ப.தற்ற நி.லையயும் சுமார் அரை மணநேரம் ஏ9 வீதி போ.க்குவரத்து த.டையும் ஏற்பட்டிருந்தது. இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் வி.சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.