இலங்கையர்களை வியப்பில் ஆழ்த்திய நபர் : நெகிழ்ச்சி அடைந்த பெண்!!

885


மனிதாபிமான செயற்பாடு..


இலங்கையில் நபர் ஒருவரின் மனிதாபிமான செயற்பாடு குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஹட்டனில் வீதியை துப்பறவு செய்து கொண்டிருந்த ஊழியர் ஒருவருக்கு 52000 ரூபாய் பணத்துடன் பை ஒன்று கிடைத்துள்ளது.எனினும் அதனை உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அந்தப் பகுதியை 43 வயதான ஆர்.ஜே.செல்வம் என்பவர் நேற்று காலை நகரத்தை சுத்தம் செய்துக் கொண்டிருந்த போது குறித்த பணப்பை கண்டெடுத்துள்ளார்.


உடனடியாக அந்த பார்சலை ஹட்டன் நகர சபையின் தலைவரிடம் சென்று வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நாட்டில் அனைவரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வாழ்கின்றனர்.


இதனால் இந்த பணத்துடனான பார்சலை உரிமையாளரிடம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, நகர சபை தலைவரிடம் செல்வம் கோரியுள்ளார்.

பணத்துடனான பை காணாமல் போனதை அறிந்த ஹட்டன், ஆரிபுர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய், மீண்டும் பையை தேடி நகரத்திற்கு சென்றுள்ளார்.

நகரம் முழுவதும் பையை தேடும் இந்த பெண்ணை அவதானித்த மற்றுமொரு நகர சபை ஊழியர், விடயத்தை வினவியதுடன், நகர சபை தலைவரிடம் பணப்பை உள்ளதென கூறியுள்ளார். நகர சபை தலைவரிடம் சென்ற பெண் பணப்பையை பெற்றுக்கொண்டார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள செல்வம், குறித்த பணத்தை தனக்கு கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டமையை பாராட்டியுள்ளதுடன், அவரின் நேர்மையான செயற்பாட்டை கண்டு நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.