கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ள பந்தய வாகன ஓடு பாதைகள்!!

560


துறைமுக நகரில்..


கொழும்பு துறைமுக நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மணல் மேடுகளுடன் கூடிய இலங்கையின் முதலாவது பந்தய வாகன ஓடு பாதைகள் அமைச்சர்கள் நாமல் ராஜபக்ச மற்றும் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.2 கிலோ மீற்றர் தூரம் கொண்டதாக இந்த ஓடு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொழும்பு டியூன்ஸ் ட்ராக்ஸ் என பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த ஓடு பாதைகள் துறைமுக நகரில் 5 ஏக்கர் காணிக்குள் அமைக்கப்பட்டுள்ளது.


திறப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர்கள் நாமல் ராஜபக்ச, பிரசன்ன ரணதுங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் ஆகியோர் ஓடு பாதைகளில் ஏ.டி.வி. வாகனங்களை இந்த மணல் மேடுகளில் ஓட்டியுள்ளனர்.