பேஸ்புக் நிறுவனத்தின் புதிய பெயரை அறிவித்தார் மார்க் ஜுக்கர்பெர்க்!!

1936

பேஸ்புக்..

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. மெட்டா (Meta) என புதிதாக பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) அறிவித்துள்ளார்.

சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை திருப்பி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.