இலங்கையில் கட்டாயமாகும் தடுப்பூசி சான்றிதழ் : அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை!!

1403

தடுப்பூசி சான்றிதழ்..

இலங்கையில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் பாவனையை இறுக்கமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதற்கமைய பொது இடங்கள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் உட்பட மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதுவரையில் நாட்டு மக்களின் சனத்தொகையில் 30 வயதிற்கு மேற்பட்ட 70 சதவீதமானோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை, நாட்டு மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மாகாணங்களுக்கு இடையிலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இன்று அதிகாலை 4 மணி முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக கோவிட் தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது. அதற்கமைய 6 மாத காலங்கள் நீடித்த மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு இன்றைய தினம் முடிவுக்கு வந்துள்ளது.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை நாளை முதல் முழுமையாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.