உடம்பில் பாய்ந்த தடியுடன் உயிருக்குப் போராடும் மயில்!!

750

Mail

தமிழகத்தின் கோவை கணபதி நல்லாம்பாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு மயில் உடலில் துளைத்த தடியுடன் சுற்றிக்கொண்டிருக்கிறது.

அந்தத் தடி மயிலின் முதுகுப் பகுதியில் இருந்து கழுத்து வரை ஊடுருவியிருக்கிறது. இதைப்பார்த்த பொது மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து சென்று அந்த மயிலைப்பிடிக்க முயன்றனர்.

அதற்குள் அந்த மயில் பறந்து சென்று விட்டது. மயில்கள் சண்டைபோடும் போது பற்றைக்குள் விழுந்தபோது தடி குத்தியதா அல்லது யாராவது மயிலை வேட்டையாடிய போது தாக்கியதில் குச்சி முதுகில் பாய்ந்ததா என்று தெரியவில்லை.

அந்த மயிலை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதன்பேரில் வனத் துறையினர் மீண்டும் அந்த மயிலை தேடிகண்டுபிடிக்கும் பணியில் களம் இறங்கியுள்ளனர்.