மீண்டும் அச்சுறுத்த வரும் A30 வைரஸ் திரிபு : உன்னிப்பாக அவதானிக்கும் இலங்கை!!

866

A30 வைரஸ் திரிபு..

A 30 கோவிட் வைரஸ் திரிபு குறித்து உலகில் பல நாடுகள் கடும் அவதானத்துடன் இருந்து வருவதுடன் இலங்கையும் இது குறித்து உன்னிப்பான அவதானிப்பில் இருப்பதாகச் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த திரிபை ஒழிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் என்ற வகையில் சுகாதார அமைச்சு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே கோவிட் வைரசின் A 30 திரிபு சம்பந்தமாக இலங்கையும் அவதானத்துடன் இருந்து வருவதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாடு தொடர்பான ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அஸ்ராசெனேகா உட்படப் பிரதான கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் அனைத்து பாதுகாப்புகளையும் இந்த புதிய வைரஸ் திரிபால் உடைக்க முடியும் எனப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.