மின்சாரம் துண்டிக்கப்பட்டால் சீர் செய்ய எவரும் இருக்கமாட்டார்கள் : அரசுக்கு எச்சரிக்கை!!

1834

மின்சாரம்..

மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சீர் செய்ய எந்தவொரு ஊழியரும் இருக்க மாட்டார்கள் என தொழிற்சங்கங்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளன.

நாட்டின் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவது தமது நோக்கம் கிடையாது எனவும் இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கத்தின் அமைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார். எனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சரி செய்ய எவரும் இருக்க மாட்டார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 3ம் திகதி மாபெரும் போராட்டமொன்றை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகாரசபையின் ஊழியர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து ஊழியர்களும் ஒரு இடத்தில் ஒன்று கூடி போராட்டம் நடாத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வேண்டுமென்றே மின்சாரம் துண்டிக்கப்படாது என்ற போதிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் அதனை சீர் செய்ய எவரும் இருக்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார். யுகதனவி மின் நிலையத் திட்டம் குறித்து அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென ரஞ்சன் ஜயலால் கோரியுள்ளார்.

-தமிழ்வின்-