அன்சி கபீர்..

இந்தியாவில் நேற்று நடந்த கோர விபத்தில் கேரள அழகியும் மற்றும் அவரது தோழியும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவணந்தபுரத்தில் வசித்து வருபவர் அன்சி கபீர். இவர் 2019ஆம் ஆண்டு மிஸ் கேரள பட்டம் வென்றுள்ளார். திருச்சூரை சேர்ந்த அஞ்சனா மாடலிங் துறையில் உள்ளார்.

இவர்கள் இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். இந்நிலையில் இருவரும் சில நண்பர்களுடன் காரில் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்தில் உயிரிழந்த தோழிகள் இருவரும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்கள்.

அன்சி கபீர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடைசியாக போஸ்டில் இது போக வேண்டிய நேரம் எனப் பதிவிட்டு ஒரு அடர்ந்த வனத்தில் நடந்து செல்வது போன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அன்சி கபீருக்கு அவரது மரணம் குறித்து முன்பே தெரிந்துவிட்டதாக என இந்த விடியோவுக்கு கீழ் அவரது நண்பர்களும், இன்ஸ்டாவில் அவரை பின் தொடர்பவர்களும் சோகமான கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர்.





