சீனியின் விலை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள முடிவு!!

1300

சீனி, அரிசி..

நாட்டில் அமுலில் இருந்த சீனிக்காக நிலவிய கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற வாழ்க்கை செலவுக் குழு கூட்டத்தில் இத தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாளை முதல் வெள்ளை சீனி கிலோவொன்றின் மொத்த விலையை 135 ரூபா முதல் 140 ரூபாவரை விற்பனை செய்யவும், 150 ரூபா சில்லறை விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 976 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக, இலங்கை சீனி இறக்குமதியாளர் சங்கத்தின் உப தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த சீனி கொள்கலன்களை விடுவிப்பதற்கான டொலர்களை வழங்க நிதியமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.