மருந்தகங்கள்..
வவுனியா மாவட்டத்திலுள்ள மருந்தகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்த நிலையில் சுகாதார அதிகாரிகளுக்கும் மருந்தக உரிமையாளர்களுடான இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் இவ்விடயத்தினை தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் கொவிட் -19 தொற்று காரணமாக சுகாதார பிரிவினருக்கு ஏற்பட்ட வேலைப்பழுவிற்கு மத்தியில் எம்மால் மருந்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்த காலப்பகுதியில் ஒர் சில மருந்தகங்கள் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அந்த அடிப்படையில் எதிர்வரும் காலங்களில் மருந்தகங்கள் மீது மிகக் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளது என வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்ததுடன்,
மருந்தக உரிமையாளர்களுக்கு சட்டதிட்டங்கள் தொடர்பில் தெளிவு வழங்கப்பட்டதுடன் அந்த சட்டதிட்டங்களுக்கு இனங்க செயற்பட வேண்டுமெனவும் , மருந்தகங்களில் மருந்தாளர் கட்டாயமாகும் , மருந்துகள் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மாத்திரம் கொள்வனவு மேற்கொள்ள வேண்டும்,
வைத்தியரின் சிபாரிசு இன்றி மருந்துகள் வழங்கப்பட கூடாது, மருந்தகங்களில் பணியாற்றும் மற்றைய ஊழியர்களும் மருந்துகள் தொடர்பில் அறிவுகளை பெற்றுக்கொண்டிருந்தல் அவசியம்,
மருந்தகங்களுக்கு குளிரூட்டி அவசியம் ஆகியவற்றினை மருந்தகங்கள் பின்பற்ற தவறினால் அந்த மருந்தகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் சுகாதாரப் பிரிவினர், மருந்தக உரிமையாளர்கள், உணவு, மருந்து பாதுகாப்பு அதிகாரி, வர்த்தக சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.