பெண் பத்திரிகையாளரை பலாத்காரம் செய்த மூவருக்கு தூக்குத் தண்டனை!!

534

Hangமும்பை பெண் பத்திரிக்கையாளர் பலாத்கார வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் ஜாதவ், காசிம்பெங்காலி, சலீம் அன்சாரி ஆகியோருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெலிபோன் ஒப்ரேட்டர் பலாத்கார வழக்கிலும் 3 பேர் தண்டிக்கப்பட்டவாகள் ஆவர். மீண்டும் பலாத்கார குற்றம் புரிந்ததால் ஐ.பி.சி-.376 இ பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி நிர்பயா சம்பவத்துக்கு பின் இபிகோ சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மீண்டும் பலாத்கார குற்றம் புரிபவர்களுக்கு மரண தண்டனை விதிக்க புதிய பிரிவு வகை அமுல்படுத்தப்பட்டுள்ளது.