பயணப் பையிலிருந்து சடலம் மீட்பு : காணாமல்போயுள்ள தங்க நகைகள் : அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்!!

1502

சப்புகஸ்கந்த..

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப் பையிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி குறித்த விடயம் தொடர்பில் சப்புகஸ்கந்த பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறுகையில், குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன. உயிரிழந்த பெண் அணிந்திருந்த சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளும் காணாமல் போயுள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பில் வசித்து வந்த இரண்டு பிள்ளைகளின் தாயான மொஹமட் ஷாபி பாத்திமா மும்தாஸ் என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டிருந்தார் என தகவல் வெளியாகியிருந்தன.

அத்துடன் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் திகதி பிற்பகல் தனது வீட்டிலிருந்து மற்றுமொரு பெண் மற்றும் ஆண் ஒருவருடன் குறித்த பெண் முச்சக்கரவண்டியில் சென்றுள்ளதை அவரது உறவினர் ஒருவர் கண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேலும், சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை இன்றைய தினம் நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.