இலங்கையில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் : வெளியாகியுள்ள தகவல்!!

2349

கட்டுப்பாடுகள்..

தொடர்ச்சியான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்ற போதும், பொது மக்கள் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் புறக்கணிப்பதால், எதிர்காலத்தில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதிகாரிகள் நிர்ப்பந்திக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியா் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கை கோவிட் வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டது போல் மக்கள் நடந்து கொள்வதாகவும் அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

நாடு இன்னும் ஆபத்தை விட்டு வெளியேறவில்லை. தொற்றுக்கள் எந்தநேரத்திலும் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது என்பதையும் மக்கள் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிப்பதே, வைரஸை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அண்மைய நாட்களில் நடைபெற்ற விழாக்கள் மற்றும் திருமணங்கள் தொற்றுக்கள் சிறிதளவு அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார்.

16 நாட்களுக்குப் பிறகு நேற்று கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐத் தாண்டியமை தொடர்பிலேயே அவா் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.