இலங்கையில் அதிகரித்துள்ள கொள்ளைச் சம்பவங்கள் : மக்களுக்கு எச்சரிக்கை!!

1166

கொள்ளைச் சம்பவங்கள்..

நாட்டின் பல பகுதிகளில் திருட்டு, வழிபறி மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. போதை பொருளுக்கு அடிமையான குழுவினரினால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் கொழும்பு உட்பட பல பிரதேசங்களில் பாதுகாப்பினை அதிகரிக்குமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். போதை பொருள் விலை அதிகரித்துள்ளமையே இந்த நிலைமைக்கு காரணமாகியுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஹெரோயின் பக்கட் ஒன்றின் விலை 3000 ரூபாய் வரை விலை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான நிலையில் பொது மக்கள் மிகுந்த பாதுகாப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.