வவுனியாவில் இரவு இரவாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டிடத்தின் நிர்மாண பணிகள் : அதிரடியாக செயற்பட்ட இளைஞர்கள்!!

3250

சட்டவிரோத கட்டிடத்தில்..

வவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் தேவஸ்தானத்திற்கு அருகாமையிலுள்ள முஸ்ஸிம் மையவாடி வளாகத்தில் இரவு இரவாக முன்னெடுக்கப்பட்ட சட்டவிரோத கட்டிடத்தில் கட்டுமான பணிகள் இளைஞர்களின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டது.

குறித்த முஸ்ஸிம் மையவாடி வளாகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வர்த்தக நிலையத்தின் கட்டுமாணப் பணிகள் இடம்பெற்று வந்திருந்தன.

எனினும் அதிகாரிகளின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த கட்டிடத்தின் மீள் கட்டுமாண பணிகள் நேற்று முன்தினம் எவ்வித அனுமதியுமின்றி அரசியல் பின்புலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதனை தடுத்து நிறுத்துமாறு உரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்த போதிலும் அவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவில்லை.

அதன் பின்னர் சில இளைஞர்கள் ஒன்றினைந்து 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து முறைப்பாடு மேற்கொண்டதின் பிரகாரம் பொலிஸார் குறித்த இடத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் கட்டுமாண பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவ்விடத்திலிருந்து அகன்று சென்றிருந்தனர்.

அதன் பின்னர் முறைபாட்டினை மேற்கொண்டிருந்த இளைஞர்களிடம் பொலிஸார் வாக்குமூலத்தினை பெற்றுச் சென்றிருந்தனர்.

இச் சம்பவம் இவ்வாறு இடம்பெற்றிருந்தமையினையடுத்து நேற்றையதினம் வவுனியா நகரசபையினரினால் குறித்த கட்டிடத்தின் நிர்மான பணிகளுக்கு தடையுத்தரவு நோட்டிஸ் ஒட்டப்பட்டது.