மழைநீரில் உயிருக்கு போராடிய இளைஞனை தோளில் தூக்கி சென்று காப்பாற்றிய ரியல் ஹீரோ ராஜேஸ்வரி : யார் இவர்?

1204

ராஜேஸ்வரி..

இறக்கும் தருவாயில் மழைநீரில் கிடந்த இளைஞரை தோளில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து உயிரை காப்பாற்றி ஒரே நாளில் ரியல் ஹீரோவான ராஜேஸ்வரி குறித்த பல நெகிழ்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை ஷெனாய் நகர் கல்லறைக்கு அருகே கிடந்த அந்த இளைஞர் இறந்துவிட்டதாகவே மக்கள் நினைத்தனர். ]அவர் இரவிலிருந்து அங்கிருந்த மரத்தின் அடியில் படுத்திருந்திருக்கிறார்.

தண்ணீரில் ஊறி மயக்கம் அடைந்துவிட்டார். அவரை தான் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காப்பாற்றியுள்ளார். உடல் விறைத்து சுய நினைவு இல்லாமல் இருந்த அவரைத் தூக்கும்போது, இறந்துவிட்டார் என்றுதான் நினைத்தேன்.

முதலுதவி செய்து பார்த்தபோது, அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனே மருத்துவமனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தேன். அவர் உயிர் பிழைத்ததில் மகிழ்ச்சி என்கிறார் ராஜேஸ்வரி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஸ்வரி கே.எச் சாலை அருகே இரவு ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது சாலையில் ஒரு மூதாட்டி பதற்றத்துடன் அழுதபடி இங்கும் அங்கும் திரிவதைப் பார்த்தார். அவரைக் கூப்பிட்டு என்ன பிரச்னை’ என்று கேட்டார்.

சகுந்தலா என்ற அந்தப் பெண்மணி, என் மகள் ஷீலா பிரசவ வலியால் துடிக்கிறாள். தலைப்பிரசவம், பனிக்குடம் உடைஞ்சுடுச்சு. மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்ல வழி தெரியவில்லை. உதவிக்கும் யாருமில்லை என்று அழுதிருக்கிறார். ராஜேஸ்வரி உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் சொன்னார்.

ஷீலாவின் வீடு இருந்தது, நம்மாழ்வார்பேட்டையில் ஆம்புலன்ஸ் வர முடியாத தெரு. உடனடியாக அந்தப்பெண்ணை தனது போலீஸ் ஜீப்பில் ஏற்றிவந்த ராஜேஸ்வரி, ஆம்புலன்ஸ் வரும்வரை காத்திருக்காமல் மருத்துவமனைக்கு விரைந்தார்.

ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்ற நிலையில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதன்பின் ஆம்புலன்ஸில் ஷீலாவை ஏற்றி அனுப்பிவைத்தார். அந்த இரவிலேயே ஷீலாவுக்கு சுகப்பிரசவம். அழகிய பெண் குழந்தை பிறந்தது. செங்குன்றத்தில் வசித்தவர் 20 வயது சுகன்யா.

அம்மா புற்றுநோயில் இறக்க, அப்பா தற்கொலை செய்துகொள்ள, தனது தங்கை 17 வயது பிரீத்தியுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தார். விழித்திறன் குறைபாடுள்ள சுகன்யாவுக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், திருமணத்தை நடத்த பணமின்றி தவித்த சுகன்யா, இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியை சந்தித்து உதவி கேட்டார்.

ராஜேஸ்வரியும், அவருடன் பணிபுரியும் சக காவலர்களும் நண்பர்களும் இணைந்து சுகன்யாவுக்கு நகை மற்றும் சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். திருமணத்தையும் சிறப்பாக நடத்தி வைத்தனர்.

இளகிய மனம் படைத்த ராஜேஸ்வரி இதுபோன்ற சேவைகளைத் தொடர்ச்சியாகச் செய்து வருகிறார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.