
என் முகாமையாளர் என்ற பெயரில் தனது பெயரை சிலர் தவறாக பயன்படுத்துவதாக இனியா ஆவேசப்பட்டார். இவர் வாகை சூடவா படம் மூலம் பிரபலமானார். மெளனகுரு, மாசாணி, நுகம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் நடிக்கிறார். இனியா இது பற்றி கூறியதாவது..
நான் முகாமையாளர் என்று யாரையும் இதுவரை வைத்துக் கொள்ள வில்லை. எனது கால்ஷீட்களை நானும் எனது அம்மாவும்தான் கவனித்து கொள்கிறோம். ஆனால் எனது முகாமையாளர் என்று கோடம்பாக்கத்தில் பல பேர் சொல்லிக் கொண்டு திரிகின்றனர்.
அவர்கள் படக் கம்பெனிகளுக்கு போய் இனியாவிடம் கால்ஷீட் வாங்கி தருகிறேன் என பேசுவதாக தகவல் வந்துள்ளது. அவர்களை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். விரைவில் சொந்தமாக முகாமையாளர் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன் என்று இனியா கூறினார்.





