வவுனியா பஸ் தரிப்பிடத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!!

570

வவுனியா தாதியர் பயிற்சி கல்லூரிக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் இருந்து முதியவரொருவரின் சடலத்தை மீட்டள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இனங்காணப்படாத முதியவர் பஸ்தரிப்பிடத்தில் கிடப்பதை கண்ணுற்ற சிலர் வவுனியா பொலிஸாருக்கு தகவலை வழங்கியதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது முதியவர் இறந்துள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இறந்தவர் தொடர்பாக எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில் வவுனியா பொலிஸார் சடலத்தினை வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன் விசாரணைகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

1 2