கடலில் துடிப்பு சிக்னல் : மலேசிய விமான கருப்புப் பெட்டியினுடையதா?

408

Flight

காணாமல் போன மலேசிய விமானத்தை இந்தியப் பெருங்கடலில் தேடும் பணியில் சீனாவின் ரோந்து கப்பலான ஹாய்க்சன்-01 ஈடுபட்டிருந்தது.

அவ்வாறு ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது கடலுக்கடியிலிருந்து துடிப்பு சமிக்ஞை (pulse signal) கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பெட்டியை கண்டுபிடிக்க அனுப்பப்பட்ட இந்த ரோந்து கப்பலுக்கு, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் கடலுக்கடியில் இருந்து வினாடிக்கு 37.5 கிலோ ஹெர்ட்ஸ் அதிர்வெண் கொண்ட துடிப்பு சிக்னல் கிடைத்ததாக தகவல்கள் கூறுகின்றன.

எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிக்னல், காணாமல் போன எம்.எச்.370 விமானத்தில் இருந்து வந்ததா என இனிமேல் தான் தெரியவரும்.