வவுனியா நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து கொடிகாமத்தில் படையினரால் வழிமறித்துச் சோதனை!!

596

Bus

பருத்தித்துறையிலிருந்து வவுனியா நோக்கிச் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் மர்மப்பொருள் இருப்பதாகக் தகவல் கிடைக்கப்பெற்றதையடுத்து அந்த பேருந்து கொடிகாமத்தில் வைத்து வாகனத்தில் வந்த பொலிஸாரினால் நேற்று சனிக்கிழமை சோதனையிடப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு அவர்களின் உடமைகள் அனைத்தும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினால் அவ்விடத்தில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது. ஆயினும், அந்த பஸ்ஸிலிருந்து எவ்விதமான மர்மப் பொருட்களும் மீட்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.