நத்தார் காலப்பகுதியில் நாடு மூடப்படுமா? பாடசாலைகள் மூடப்படுமா?

1864


நத்தார் காலப்பகுதியில்..



பயணங்கள் மேற்கொள்ளும் மக்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.



சிலர் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதனால் எதிர்வரும் நத்தார் காலப்பகுதியில் நாடு மூடப்படுமா? பாடசாலைகள் மூடப்படுமா? என்ற தீர்மானங்கள் மக்கள் கையில் உள்ளதென சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.




வார இறுதி விடுமுறையை கழிப்பதற்காக பல பகுதிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு பிரதேசங்களுக்கு பயணிப்பதனை அவதானிக்க முடிகின்றது. எப்படியிருப்பினும் இதுவரையில் இலங்கையின் பல பிரதேசங்களுக்கு பயணிப்பவர்கள் சுகாதார ஆலோசனைகளை மீறி செயற்படுகின்றனர்.


பாரிய அளவிலான மக்கள் ஏரிகள், குளங்கள், போன்ற இடங்களில் மக்கள் குவிந்து கிடப்பதனை அவதானிக்க முடிந்துள்ளது. வார இறுதியில் விடுமுறைக்காக ஏதாவது பிரதேசங்களுக்கு சென்றிருந்தால் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மக்களின் செயற்பாட்டிற்கமையவே எதிர்வரும் நத்தாரில் நாட்டை மூடுவதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும். இதனால் பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் மேலம் தெரிவித்துள்ளார்.