இலங்கையில் ஆபத்தான புதிய கொவிட் திரிபு வைரஸ் கண்டுபிடிப்பு!!

1386

புதிய கொவிட் திரிபு..

இலங்கையில் கொவிட் வைரஸின் புதிய டெல்ட்டா திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளர்.
இந்தத் தகவலை ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் பிரதானி பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே அடையாளங்காணப்பட்ட பீ.1.617.2.28 திரிபை ஒத்த பீ.1.617.2.104 என்ற புதிய டெல்ட்டா திரிபொன்று அடையாளங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா வைரஸை விட இந்த புதிய திரிவு அதிக வீரியமிக்கதாக இருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் ஐந்தாவது கோவிட் அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.