ஆர்த்தி அதிமுகவில், கணேஷ்கர் பாஜகவில்!!

734

Aarthi

நகைச்சுவை நடிகை ஆர்த்தியின் கணவர் கணேஷ்கர் பாஜகவில் இணைந்துள்ளார். திரைப்பட நகைச்சுவை நடிகர் கணேஷ் (எ) கணேஷ்கர், பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலையில் பாஜவில் நேற்று முன்தினம் இணைந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்தியாவை மோடியால் மட்டுமே காப்பாற்ற முடியும். காங்கிரஸ் கட்சி என்னென்ன செய்தது என்று மக்கள் அனைவருக் கும் தெரியும் என்பதால் நான் பாஜவில் சேர்ந்துள்ளேன்.

விரைவில் தமிழகம் முழுவதும் பாஜ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்றும் மனைவி ஆர்த்திக்கும், பாஜவில் நான் சேர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 27ம் திகதி நடிகை ஆர்த்தி கணேஷ் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். மேலும் அதிமுகவுக்கு ஆதரவாக அவர் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.