அரச ஊழியர்களுக்குவிடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!!

3624

அரசாங்க நிர்வாகத்திற்கு எதிரான விமா்சனங்களை தடுக்கும் ஒரு புதிய நடவடிக்கையாக சமூக ஊடக தளங்கள் ஊடாக அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதைத் தவிர்க்குமாறு அரச பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பொது நிர்வாக அமைச்சகத்தின் இந்த உத்தரவை மீறினால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரச பணியாளா்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர் உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும்,

விமர்சிப்பதாக தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தொிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்தாபன கோவைக்கு இணங்க, அரச துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும்,

விமர்சிக்கும் பொதுத்துறைப் பணியாளா்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பொதுத்துறை ஊழியர்களின் கருத்துக்கள் குறித்து தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வருவதாக அமைச்சகம் கூறியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரின் தகவல்படி, அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான விமர்சனங்கள் இதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கிராமசேவகர் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவே அதிகளவான முறைப்பாடுகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த மாதம், விவசாய அமைச்சு, ரசாயன உரத்திலிருந்து சேதன உரத்திற்கு மாறும் அரசாங்கத்தின் கொள்கையை விமர்சித்ததன் அடிப்படையில்,

பேராசிரியர் புத்தி மாரம்பேயை விவசாய அமைச்சகம், அனைத்து பதவிகளில் இருந்தும் விடுவித்தமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-