சாகும் கடைசி பெண் நானாக தான் இருக்கனும் : 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முன் எழுதி வைத்திருந்த கடிதம்!!

3421


தமிழகத்தில்..


தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் எழுதியிருந்த கடிதம் இப்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியில் செயல்பட்டும் வரும் தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவர், நேற்று பள்ளியில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.


வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாத நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக் கண்ட அந்த மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.


அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மாணவி எழுதியுள்ள கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் பாலியல் வன்கொடுமையால் சாகும் கடைசி பெண் தானாக தான் இருக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த பூமியில் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போ பாதியிலேயே போறேன்.மீண்டும் ஒரு முறை இந்த உலகில் வாழ வாய்ப்பு கிடைத்தால் நல்லா இருக்கும். பெரிய பெண் ஆகி, நிறைய பேருக்கு உதவி பண்ணனும்னு ஆசை. ஆனா முடியாவில்லை.

தனது தாய், சித்தப்பா, மாமா ஆகியோரை மிகவும் பிடிக்கும், யாருக்கிட்டயும் சொல்லாம போகிறேன்,என்னை மன்னித்து விடுங்கள், இனி எந்த ஒரு பெண்ணும் தன்னை போன்று சாகக் கூடாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதே கரூரில் தான் கடந்த வாரம் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல், சில தினங்களுக்கு முன்பு கோயமுத்தூரில் பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து தற்போது, மேலும் ஒரு மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.