வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!

2484


விபத்து..


வவுனியா, நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.செட்டிகுளம் பகுதியில் இருந்து நெளுக்குளம் நோக்கி வந்த முச்சக்கர வண்டி ஒன்று சூடுவெந்தபுலவு பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதியில் இருந்து மறுபக்கம் திரும்ப முற்பட்ட போது முச்சக்கர வண்டியின் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.


விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், நோயாளர் காவு வண்டியின் மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


சம்பவ இடத்திற்கு வருகைதந்த உளுக்குளம் பொலிசார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.